உக்ரைனில் 1000 தமிழர்கள் சிக்கி தவிப்பு: விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்..!!

Author: Rajesh
20 February 2022, 10:43 am
Quick Share

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் அச்சம் எழுந்த நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்ததால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த 1,000 பேர் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பதற்காக சென்ற மாணவர்கள் மற்றும் சிலர் வேலைக்காகவும் சென்றவர்கள் என தெரிகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 715

0

0