அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டடம்: 102 பேர் பலியானதாக தகவல்..!!

25 June 2021, 2:53 pm
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர்.

1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த கட்டிடம் இன்று அதிகாலை 1 மணி அளவில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் , 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை, மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 236

0

0