அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

14 November 2020, 2:00 pm
us secret officers - updatenews360
Quick Share

அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதியஅதிபர் ஜோ பைடன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது.

அதிபர் தேர்தலை ஒட்டி நடந்த பல பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 3 வாரங்களாக வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளிலும், கடந்த 3ம் தேதி ட்ரம்ப் அளித்த இரவு விருந்திலும் பலர் முகக்கவசம் இன்றி பங்கேற்றதும் தொற்று பரவியதற்கான காரணமாக கூறப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 21

0

0