ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்: ஃபேரோ தீவின் பாரம்பரிய திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

Author: Aarthi
15 September 2021, 11:22 am
Quick Share

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்ட நிகழ்விற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவு மக்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர். படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர்.

இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுபோன்று, கடல்வாழ் உயிரினங்களை கொன்று குவித்த இந்த திருவிழாவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Views: - 318

0

0