நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளம்: மீட்பு ணியில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள்..!

Author: kavin kumar
15 August 2021, 7:55 pm
Quick Share

சீனாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் 19 பேர் சிக்கி தவிக்கின்றனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை வெள்ளத்தில் சீனாவின் கிங்காய் மாகாணம் திகழ்கிறது. இந்நிலையில் வடகிழக்கில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அதில் பணியாற்றி கொண்டிருந்த 21 பேரும் வெள்ளத்தில் சிக்கினர். இதில் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பாதிக்கப்பட்டுள்ள 19 பேரை மீட்கும் பணியில் 120 தீயணைப்பு வீரர்களும், 32 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Views: - 226

0

0