பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி…ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு..!!
Author: Aarthi Sivakumar7 October 2021, 9:07 am
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரிக்டரில் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் இருந்த பலரும் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
0
0