இது சூடான் சோகம்..! கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து..! 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

4 December 2019, 9:54 am
Quick Share

கார்ட்டோம்: சூடானில் கேஸ்  டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 23 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர்.

அந்நாட்டின் தலைநகரான கார்ட்டோமில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அங்குள்ள செராமிக் ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது ஆலையில் இருந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. தீயில் சிக்கிய தொழிலாளர்கள் அலறியபடியே ஓடினர்.

அவர்களில் சிலரை, சக ஊழியர்கள் காப்பாற்றி உள்ளனர். ஆனாலும், 23 பேர் பலியானதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.

பலியானவர்களில் 14 உடல்கள் முற்றிலும் அடையாளம் தெரியாத வகையில் கருகி இருக்கின்றன. ஏராளமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்து பலர், தலைநகரின் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதததே, இந்த விபத்துக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

முழுமையான விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் வெளியாகும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தாமாக முன் வந்து ரத்த தானம் செய்யும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 thought on “இது சூடான் சோகம்..! கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து..! 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

Comments are closed.