பெரு நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலியான சோகம்..!!

19 June 2021, 9:24 am
Quick Share

லிமா: பெரு நாட்டின் தெற்கு பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் அயாகுசோ நகரில் இருந்து ஆரிகுப்பா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் அந்த பேருந்து பெருவியன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது திடீரென 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Accident_UpdateNews360

அந்த பேருந்தில் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் அவர்கள் நாஸ்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி உடனடி விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதுபற்றி பெருவியன் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 231

0

0