நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பொதுமக்கள் படுகாயம்..!!

9 May 2021, 8:49 am
newyork gunshot - updatenews360
Quick Share

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 2 அல்லது 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் அப்பாவி பொதுமக்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அனைவருக்கும் காலில் தான் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Views: - 234

0

0