மியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் பலி..!

28 February 2021, 9:35 pm
Myanmar_protests_updatenews360
Quick Share

அண்மையில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான எதிர்ப்பைத் தடுக்க நாட்டின் இராணுவத் தலைவர்கள், மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க முடுக்கிவிட்ட நிலையில், மியான்மர் பாதுகாப்புப் படையினர் இன்று மூன்று எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்றனர்.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி, நடந்து வரும் மிகப்பெரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவ ஆட்சிக்குழு போராடுகிறது. ஆங் சான் சூகி இந்த மாத தொடக்கத்தில் உயர்மட்ட அரசியல் கூட்டாளிகளுடன் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டார்.

போலீஸ் மற்றும் வீரர்கள் ஏற்கனவே ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை சமீபத்திய வாரங்களில் ஆர்ப்பாட்டங்களில் சுட்டனர். மக்கள் மேற்கொண்டு வரும் ஒத்துழையாமை பிரச்சாரத்தை நிறுத்தும் ஒரு முயற்சியாக, சில சமயங்களில் நேரடி துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால் எதிர்ப்பாளர்கள் மீண்டும் தெருக்களில் குவியுமாறு ஆன்லைனில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை ஏராளமானோர் சாலைகளில் குவிந்தனர்.

தெற்கு கடலோர மையமான டேவியில் ஒரு பேரணியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர் என்று ஒரு தன்னார்வ மருத்துவர் மற்றும் உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு ஊழியர் ப்யே ஸா ஹெய்ன் ஊடகங்களுக்கு அளித்த பெட்டியில் மூவரும் நேரடி துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டனர் என்றும், காயமடைந்தவர்கள் ரப்பர் தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

“மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். ஏனென்றால் காயமடைந்தவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.” என்று அவர் கூறினார். இதற்கிடையே வணிக மையமான யாங்கோன் உட்பட நாட்டின் பிற இடங்களிலும் இறப்புகள் ஏற்பட்டது குறித்து பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

இதனால் மியான்மரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Views: - 3

0

0