இது தேவையா? 30 கிலோ ஆரஞ்சை சாப்பிட்டா அப்புறம் இது தான் நடக்கும்!

30 January 2021, 8:46 am
Quick Share

விமான நிலையத்தில், லக்கேஜ் கட்டணத்தை தவிர்ப்பதற்காக, தாங்கள் கொண்டு வந்த 30 கிலோ ஆரஞ்சு பழத்தை, 4 பேர் சாப்பிட்ட சம்பவம் சீனாவில் நடந்தது. சிட்ரஸ் ஆசிட் அதிகமாக உட்கொண்ட காரணத்தால், வாய் புண் தான் அவர்களுக்கு வந்ததாம்..

சீனாவை சேர்ந்த வாங் என்ற நபர் தனது 3 நண்பர்களுடன், விமான பயணம் செய்ய குன்மிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு செல்வதற்கு முன், 50 யுவான் மதிப்பில், 30 கிலோ ஆரஞ்சு பழத்தை பெட்டியாக வாங்கியிருக்கிறார். இதன் இந்திய மதிப்பு 564 ரூபாய்.

ஆனால் விமானம் ஏறப்போகும் முன், ஆரஞ்சு பழத்திற்காக கூடுதல் லக்கேஜ் கட்டணம் கட்டும் படி சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு தெரியுமா? 300 யுவான். அதாவது இந்திய மதிப்பில் 3384 ரூபாய். இதனால் 4 பேரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கூடுதல் கட்டணம் செலுத்த விரும்பாத அவர்கள், பழங்களை தாங்களே சாப்பிட முடிவு செய்தனர். விமானம் கிளம்பும் முன் 20 நிமிடத்தில் 30 கிலோ ஆரஞ்சு பழத்தையும் அவர்கள் 4 பேர் சேர்ந்து காலி செய்துள்ளனர்.

இந்த வித்தியாமான நிகழ்வில் அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட். ஆரஞ்சு பழத்தில் சிட்ரஸ் ஆசிட் அதிகமாக இருக்கும். அதனை அதிகமாக சாப்பிட்ட காரணத்தால், அவர்கள் வாயில் புண் வந்து அவதிப்படுகின்றனராம். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள், இனி தங்கள் வாழ்நாளில் ஆரஞ்சு பழமே சாப்பிடப் போவது இல்லை என முடிவு எடுத்துள்ளனராம்…! நல்ல முடிவு என்கிறீர்களா..!

Views: - 0

0

0