குட்டி மானை வீட்டுக்கு அழைத்து வந்த சுட்டிப் பையன்! வைரல் போட்டோ

30 January 2021, 9:00 am
Quick Share

தனியாக விளையாட சென்ற சிறுவன் ஒருவன், வீடு திரும்பும் போது, குட்டி மான் ஒன்றை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். இதனை அவரது அம்மா போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த ஒரே போட்டோவால், சிறுவன் பிரபலமாகி விட்டான்.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டெபான் இப்ராஹ்ம். இவர் சட்டப்பேரவை நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தினமும் பரபரப்பாக இயங்கி வரும் இவருக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது. இதற்காக குடும்பத்துடன் ரிசார்ட் ஒன்றில் தங்கி, சில நாட்களாக ஓய்வை கழித்து வந்தார். ஸ்டெபானி தன் மனைவி பிரவுன் உடனும் மகன் டொமினிக் உடனும் ரிசார்ட்டில் இருந்த போது, 4 வயது நிரம்பிய சுட்டி சிறுவனான டொமினிக், வெளியே விளையாட சென்றிருக்கிறான்.

மகனுக்கு பிடித்த உணவை தயார் செய்வதில், பிரவுன் பிஷியாக இருந்திருக்கிறார். வாசலில் காலடி சத்தம் கேட்டதும், மகனை வரவேற்க வாசற்படி சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குட்டி மான் ஒன்றுடன் நின்றிருந்தான் டொமினிக். அருகருகே இருவரும் நின்றிருந்ததை கண்ட பிரவுன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். உடனடியாக இதனை தனது மொபைல் போனில் படம் பிடித்த பிரவுன், அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த அழகான படத்திற்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 4 ஆயிரம் பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். குழந்தையின் மனம் அப்பழுக்கற்றது.. ஷோ கியூட்… மான் குட்டியை போல் சுட்டி குழந்தைக்கும் அழகான கண்கள் என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

குட்டி மானை வீட்டில் வைத்து விளையாட போகிறேன் என மகன் கூற, பாசத்துடன் மகனை கட்டி அணைத்திருக்கிறார் பிரவுன். உனக்கு அம்மா இருப்பது போல், குட்டி மானுக்கும் அம்மா இருக்கிறது. மானை அதன் அம்மாவிடம் விட்டு விடுவோமா என கேட்க சரி என தெரிவித்திருக்கிறான் இந்த பாசக்கார சிறுவன். இதனையடுத்து இருவரும் குட்டி மானை காட்டில் சென்று விட்டு வந்துள்ளனர். இந்த ஒரு போட்டாவால், டிவியில் பேட்டி எடுக்கும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறான் இந்த சிறுவன். கியூட்…!

Views: - 0

0

0

1 thought on “குட்டி மானை வீட்டுக்கு அழைத்து வந்த சுட்டிப் பையன்! வைரல் போட்டோ

Comments are closed.