40% போர் விமானங்கள் இயக்குவதற்கு தகுதியில்லாதவை..! பாகிஸ்தான் விமானப்படையின் ரகசிய அறிக்கை அம்பலம்..?

3 November 2020, 4:59 pm
JF-17_fighter_jet_UpdateNews360
Quick Share

இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை எதிர்கொள்ள உள்ள பாகிஸ்தானின் முன்னணி போர் விமானமாக சீனாவுடன் கூட்டுத் தயாரிப்பில் ஜே -20 போர் விமானங்களை பாகிஸ்தானில் தயாரிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படையின் உண்மையான நிலை குறித்த தகவல் கசிந்துள்ளது.

இரண்டு பாகிஸ்தான் விமானப்படை தளங்களில் உள்ள ஜே.எஃப் -17 போர் விமானங்களில் சுமார் 40 சதவீதம் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டமைப்பு சிக்கல்களுடன் தொடர்புடையதால் இந்த சிக்கல்களுக்கு விரைவான தீர்வு இல்லை எனக் கூறப்படுகிறது.

ஜே.எஃப் -17’இன் பிரதான மின் அமைப்பு சரியாக செயல்படவில்லை. இரட்டை இருக்கை கொண்ட ஜே.எஃப் -17 பி’யிலும் இதுதான் நிலைமை. இந்த வகை விமானங்கள் விமானிகளால் இயக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பல விமானங்களில் இறக்கைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது வானில் பறக்கும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நடந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜே.எஃப் -17’இல் லேண்டிங் கியர் உடைந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது இது கட்டமைப்பு பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். ரேடார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட உபகரணங்கள் போன்றவையும் பல விமானங்களில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தத்தில் சீனாவிலிருந்து பெறப்பட்ட போர் விமானங்களில் 40% இயக்குவதற்கு ஏற்ற நிலையில் இல்லாததால், பாதுகாப்பு ரீதியாக மிக மோசமான சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது.

Views: - 18

0

0