லேண்ட் க்ரூசர் காரை ஓட்டும் 5 வயது சிறுவன்: வைரல் வீடியோ

29 January 2021, 9:50 am
Quick Share

5 வயது பச்சிளம் பாலகன் ஒருவன், மிகப்பெரிய லேண்ட் க்ரூசர் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பாகிஸ்தானில் படமாக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில், சிறுவன் ஒருவன் கார் ஓட்டிச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆம்.. காரை ஓட்டி செல்பவன் வெறும் 5 வயது மட்டுமே நிரம்பியிருக்கும் சிறுவன். அவன் அளவுக்கு துளியும் பொருந்தி போகாத, எஸ்யூவி ரக காரான பிரமாண்டமான லேண்ட் க்ரூசர் காரை அவன் ஓட்டி செல்கிறான். எப்படி கியர், பிரேக் அவனுக்கு எட்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு தோணலாம்..

அந்த சிறுவன் உட்கார்ந்தால் தன்னால் வண்டி ஓட்ட முடியாது என்பதை உணர்ந்து, நின்று கொண்டே அந்த காரை இயக்குகிறான். அதிலும் வீடியோ எடுக்கும் பைக் நபரை முந்தி, அந்த கார் வேகமாக செல்கிறது. இது டுவிட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மிகவும் ஆபத்தான செயல் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது பிராங்க் ஷோ தானே என டுவிட்டர் பயனர் ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவர், அந்த சிறுவன் கண்டிப்பாக சூப்பர் மேனாக தான் இருக்க முடியும் என பதிவிட்டுள்ளார். நானெல்லாம் 5 வயசுல, படுக்கையை அசிங்கம் செய்து, அம்மாவிடம் அடி வாங்கி கொண்டிருந்தேன்..

Views: - 0

0

0