ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் காலரா தொற்றுக்கு 50 பேர் பலி..!

7 April 2021, 2:30 pm
Cholera_Outbreak_UpdateNews360
Quick Share

நைஜீரியாவில் இந்த ஆண்டு காலரா தொற்று காரணமாக 50 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் எட்டு மாநிலங்களில் காலரா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக நைஜீரியா நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) தெரிவித்துள்ளது. தற்போது நிலைமையை கண்காணித்து தேசிய அளவில் தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

“மார்ச் 28’ஆம் தேதி நிலவரப்படி, மொத்த பாதிப்புகளான 1,746’இல் 50 இறப்புகள்என இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக பதிவாகியுள்ளன” என்று என்சிடிசியின் தலைவர் சிக்வே இஹெக்வாசு அபுஜாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாசராவா, சோகோடோ, கோகி, பேயல்சா, கோம்பே, ஜம்பாரா, டெல்டா மற்றும் பெனூ ஆகிய மாநிலங்கள் சந்தேகத்திற்கிடமான காலரா நோய்களைப் பதிவு செய்துள்ளதாக இஹெக்வாசு தெரிவித்தார்.

காலரா என்பது மிகவும் கடுமையான நோயாகும். திடீரென கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் காலரா பாதிப்பு ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நிலவுகிறது. இது ஆண்டுதோறும் பெரும்பாலும் மழைக்காலங்களில் நிகழ்கிறது மற்றும் பெரும்பாலும் மோசமான சுகாதாரம், கூட்டம், சுத்தமான உணவு மற்றும் நீர் பற்றாக்குறை மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தல் போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது.

முன்னதாக நவம்பர் 20, 2019 அன்று, நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான உறுதிப்பாட்டுக்கு இணங்க 2025’ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார்.

இந்த ஆவணத்தில் கையெழுத்திடும் அதே வேளையில், நைஜீரியாவின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான துறையிலும் புஹாரி அவசரகால நிலையை அறிவித்தார். இந்த நடவடிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறப்புகளை ஏற்படுத்தும் நீரினால் பரவும் நோய்களின் பரவலைக் குறைக்கும் என்று கூறினார்.

2018’ஆம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 16,000’க்கும் மேற்பட்ட காலரா தொடர்பான பாதிப்புகளை என்சிடிசி உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

Leave a Reply