ஆப்கனில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பரிதாப பலி…பலர் படுகாயம்..!!

Author: Aarthi Sivakumar
21 October 2021, 4:36 pm
Accident -Updatenews360
Quick Share

பைசாபாத்: ஆப்கானிஸ்தானில் பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் வாகனம் ஒன்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் யப்தல் இ பயன் என்ற மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வாகனம் பைசாபாத் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஓட்டுநர் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 482

0

0