67 வயதில் மீண்டும் காதலில் விழுந்த பில்கேட்ஸ்…. அதுவும் யாருடன் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
9 February 2023, 5:52 pm
Quick Share

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது 67 வயதில் காதல் வலையில் விழுந்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தங்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக, மனைவி மெலிண்டா பில்கேட்ஸை விவகாரத்து செய்தார். இதன்மூலம், 27 ஆண்டுகால திருமண பந்தம் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், 67 வயதான பில்கேட்ஸ் தற்போது மீண்டும் காதல் வலையில் விழுந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2019ம் ஆண்டு மரணமடைந்த ஓராக்கள் நிறுவனத்தின் சிஇஓவான மார்க் ஹார்டின் மனைவி பவுலா ஹர்டு (60) உடன் பில்கேட்ஸ் காதல் வயப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இருவரும் ஜோடியாக அமர்ந்து போட்டியைக் கண்டு களித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பவுலா ஹர்டும், பில்கேட்ஸும் ஒரே வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஹர்டின் இறப்புக்கு முன்பே இருவருக்கும் உறவு இருந்ததாகவும், டென்னிஸ் மீதான ஆர்வம்தான் அதற்கு காரணம் என்றும் பேஜ்சிக்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Views: - 152

0

0