ஈகுவடாரில் சிறைச்சாலைகளில் நடந்த கலவரம்: கைதிகளின் பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு..!!
26 February 2021, 8:39 amகுயாகு: ஈகுவடார் நாட்டில் சிறைச்சாலைகளில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் உள்ள 3 சிறைச்சாலைகளில் இரு குழுக்களுக்கு இடையே திடீரென கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் போராடி அவர்களைக் கட்டுப்படுத்தினர், மேலும் அவர்களுக்கு உதவ இராணுவம் நிறுத்தப்பட்டது. ஆனால் கலவரத்தில் மொத்தம் 62 கைதிகள் இறந்ததாக தகவல் வெளியானது. கலவரத்தால் கலக்கமடைந்த சிறைவாசிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஈக்வடாரின் மேற்கு துறைமுக நகரமான குயாகுவில் சிறைக்கு வெளியே தகவல்களுக்காக கவலையுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் கியென்கா, குயாகு, லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் தொடங்கிய கலவரம் அந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்ட பிறகும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இதையடுத்து, அந்தக் கவலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 79 ஆக உயா்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த 3 சிறைகளிலும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது. ஈக்வடாரிலுள்ள சிறைக் கைதிகளில் சுமார் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா். கிரிமினல் கும்பல்களுக்கு இடையேயான இந்த சண்டையில் பல கைதிகள் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் பல போலீசாரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0