அலாஸ்காவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ரிக்டரில் 8.2 ஆன பதிவு…சுனாமி எச்சரிக்கை விடுத்த அரசு..!!

Author: Aarthi
29 July 2021, 4:18 pm
Quick Share

வாஷிங்டன்: அலாஸ்காவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்காவில் மிகப்பெரிய நகரான அன்கோரக்கில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ளது பெரிவில்லி. இந்த நகரில் இருந்து 56 மைல் தொலைவில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது.

latest tamil news

பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது. அலாஸ்காவில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. ஆனால், பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த 1964ல் ரிக்டரில் 9.2 என்ற அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. சுனாமியும் தாக்கியது. இதனால் அன்கோர்க் உள்ளிட்ட சில பகுதிகள் பேரழிவை சந்தித்தது. 250 பேர் உயிரிழந்தனர்.

Views: - 285

0

0