புதுமை விரும்பியா நீங்கள்?..:உங்களுக்காகவே வருகிறது நவீன வசதிகளுடன் விண்வெளியில் ஓட்டல்…!!

2 March 2021, 1:39 pm
space hotel - updatenews360
Quick Share

வாஷிங்டன்: சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என நவீன வசதிகளுடன் 400 அறைகள் கொண்ட ஓட்டல் ஒன்று விண்வெளியில் உருவாகி வருகிறது.

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்ப்ளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின் ஓட்டல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவில் நாசா வீரர்கள், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் உள்ளனர். வெவ்வேறு நோக்கங்களுக்காக பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்குதல் மற்றும் அதிவேக விண்வெளி ரயில் ஆக இருக்கும். இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாக இது இருக்கும். இந்த 24 ஒருங்கிணைந்த வாழ்விட தொகுதிகள் ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதில், ஓட்டல் அறைகள் முதல் திரைப்பட அரங்குகள் வரை அனைத்து வசதிகளையும் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. விண்வெளி ஓட்டல் ஒரு பெரிய வட்டமாக இருக்கும் மற்றும் செயற்கை ஈர்ப்பை உருவாக்க சுழலும், இது சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு சமமாக அமைக்கப்படும்.

இந்த ஓட்டலில் தங்கும் அறைகள், சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதி கொண்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. ஒரு கப்பலில் நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் இந்த விண்வெளி ஓட்டலில் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.

பணிகள் நிறைவுற்ற பின் இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2025ல் கட்டுமானப் பணிகள் முடிந்தாலும் 2027ம் ஆண்டு முதல்தான் மனிதர்கள் செல்லமுடியும் என்று ஆர்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கட்டுமானப் பணிகளுக்கான செலவு, மனிதர்கள் தங்கும் செலவு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Views: - 8

0

0