பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி…!!

21 October 2020, 1:55 pm
pak karachi blast - updatenews360
Quick Share

கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி; 20 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் மஸ்கன் சவ்ரங்உகி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பின் தன்மை குறித்து கண்டறியப்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு கட்டத்தின் 2வது மாடியில் நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குண்டு வெடிப்பு காரணமாக கட்டிடங்களின் ஜன்னல்கள், சில வாகனங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் ஜின்னா காலனி அருகே பேருந்து நிறுத்த நுழைவாயிலில் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

Views: - 21

0

0