ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட திருமண பேருந்து: 23க்கும் மேற்பட்டோர் பலி…கென்யாவில் சோகம்..!!

Author: Aarthi Sivakumar
6 December 2021, 5:00 pm
Quick Share

கென்யா: கென்யாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 23 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவில் சமீப தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு தேவாலயத்தின் பாடகர் குழுவினர் பேருந்தில் பயணித்துள்ளனர்.

அப்போது, பேருந்து கிடுய் கவுண்டியில் இருக்கும் என்சியூ ஆற்றின் பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருந்த வெள்ள நீரை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக, அந்தப் பேருந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது.

எனவே, பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இது தொடர்பில் தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். எனினும், இந்த பயங்கர விபத்தில், குழந்தைகள் உட்பட 23 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

12 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பேருந்து ஓட்டுனருக்கு கிடுய் கவுண்டி சாலை குறித்து சரியாக தெரியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பேருந்தில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகவில்லை.

Views: - 471

0

0