அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்!
அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது 40 வயது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 4 வயது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நாதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கொலை மற்றும் தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.
கணவனும் மனைவியும் குளியலறையில் துப்பாக்கிச் குண்டு பட்டு உயிரிழந்ததாக San Mateo போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 9 மி.மீ துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் மற்றும் ஆலிஸ் இருவரும் ஐடி துறையில் பணியாற்றி கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தனர். 2020 ஆம் ஆண்டில் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.42 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி நியூ ஜெர்சியிலிருந்து சான் மேடியோ கவுண்டிக்கு குடிபெயர்ந்தார்.
நீதிமன்ற பதிவுகளின்படி, ஆனந்த் 2016 டிசம்பரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் கணவனும் மனைவியும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.