உக்ரைனில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து: 15 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

22 January 2021, 11:29 am
ukrain - updatenews360
Quick Share

கிவி: உக்ரைன் நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உள்ளே 33 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையின் இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0