ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் : இந்த வீடியோவுக்கு உங்க கமெண்ட்ஸ் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 4:18 pm
Bison Lion- Updatenews360
Quick Share

ஆபத்தில் இருக்கும் போது உதவ யாருமே இல்லைனா எப்படியெல்லா மனசு கஷ்டப்படும். அதே சமயத்தில் ஆபத்துனு வரும் போது நமக்கு உதவறவங்கள வாழ்க்க பூராவும் மறக்க மாட்டோம். இது மனிதர்களுக்குள்ள மட்டுமல்லங்க, விலங்குகளுக்கும் இருக்குனு இந்த வீடியோ நிரூபிச்சிருக்கு

சமூக வலைதளங்களில் வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா வெளியிட்ட வீடியோவில், சிங்கங்களின் பிடியில் சிக்கிய காட்டெருமை ஒன்று, சிங்க கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயன்றது. ஆனால் சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து காட்டெருமைய துவம்சம் செய்ய ஆரம்பித்தன.

இதைப்பார்த்த சக காட்டெருமை ஒன்று என் நண்பன் மேல யார் டா கை வைச்சது என்ற தொனியில் சிங்கங்கள் இருந்த பகுதிக்கு ஓடி வந்தது. காட்டெருமையை பார்த்த சிங்கங்கள் மிரண்டு, நாலாபுறமும் சிதறி ஓடின. இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

ஆபத்துல உதவுபவன் தான் உண்மையான நண்பன் இந்த பழமொழி இவங்களுக்கு ஒத்து போயிருக்கு.. இந்த வீடியோவ பார்த்தவுடன் உங்களோட கருத்து என்ன? கீழே உள்ள கமெண்ட்ல உங்க கருத்து சொல்லுங்க.

Views: - 519

1

0