உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் – அதிர்ச்சி தகவல்

Author: Aarthi
6 October 2020, 8:24 am
WHO - updatnews360
Quick Share

உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன், உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Corona_Test_UpdateNews360

உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் பேசுகையில், கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரிக்கும் எனவும், இருப்பினும் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 265

0

0