ஆப்கனில் மசூதியில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல்… 37 பேர் பலி : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

Author: Babu Lakshmanan
16 October 2021, 10:15 am
mosque attack - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் 37 பேரை பலி கொண்ட மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தலிபான்கள் கைப்பற்றிய பின் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி குண்டூஸ் மாகாணத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று கந்தஹார் நகரில் அமைந்த மசூதியில் வழக்கம்போல் தொழுகை நடைபெற்றது. ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கான இந்த மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 37 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Views: - 460

0

0