எங்கு திரும்பினாலும் மரண ஓலம்… ஆப்கன் பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 7 பேர் பலி… 15 பேர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
7 October 2021, 4:57 pm
bomb-blast_ - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது முதல் அங்குள்ள மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகளவில் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், உலக நாடுகளுக்கு ஆப்கன் ஆட்சியின் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள மதப்பள்ளியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேரின் உயர்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக, காபூலில் உள்ள மசூதி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Views: - 624

0

0