பாதுகாப்புத்துறை அமைச்சரின் வீட்டருகே தலிபான்கள் வெடிகுண்டுத் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
4 August 2021, 7:35 pm
afghan army - - updatenews360
Quick Share

பாதுகாப்புத்துறை அமைச்சரின் வீட்டருகே தலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், அந்நாட்டு அரசுக்குமான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு காபூலில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதுவின் குடியிருப்பிற்கு அருகே தலிபான்கள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கன் அரசு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

Views: - 436

0

0