ஸ்புட்னிக்கை அடுத்து இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிடும் ரஷ்யா..!

Author: Sekar
9 October 2020, 6:38 pm
coronavirus_vaccine_updatenews360
Quick Share

ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய பின்னர், ரஷ்யா தனது இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அக்டோபர் 15’ஆம் தேதி பதிவு செய்யத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய முதல் நாடாக மாறியது. அந்த முதல் தடுப்பூசி ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகளுக்கும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ரஷ்யா தனது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை அக்டோபர் 15’ஆம் தேதி அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே தொற்று நோய்க்கான வரவிருக்கும் தடுப்பூசி குறித்த சில முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம்.

ரஷ்யாவின் 2’வது கொரோனா வைரஸ் தடுப்பூசி | முக்கிய அம்சங்கள்

  • புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது. இது சமீபத்தில் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்துள்ளது.
  • ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகம் எபிவாகோரோனா தடுப்பூசியை பதிவு செய்வதற்கான நடைமுறையைத் தொடங்கியது.
  • 2020 அக்டோபர் 15’ஆம் தேதி எபிவாகொரோனா தடுப்பூசியின் பதிவு நடைமுறையை ரஷ்யா முடிக்க உள்ளது என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு குறித்த கண்காணிப்புக்கான பெடரல் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை மாதத்தில் வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் மனித சோதனைகளுக்காக ரஷ்ய சுகாதார அமைச்சகத்திடமிருந்து அனுமதியை பெற்றது.
  • கடந்த மாதம் செப்டம்பரில், சோதனைகளில் பங்கேற்ற சுமார் 20 தன்னார்வலர்கள் மருத்துவ வசதியிலிருந்து சோதனை முடித்து நலமுடன் வெளியேற்றப்பட்டனர்.
  • மருத்துவ பரிசோதனைகள் குறித்து பேசிய ரஷ்யாவின் தலைமை சுகாதார மருத்துவர் அன்னா போபோவா, தன்னார்வலர்கள் தேவையான நோய்யெதிர்ப்புச் சக்தியை உருவாக்கிய நிலையில், எந்தவொரு எதிர்வினையும் ஏற்படவில்லை.
  • ரஷ்யாவின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டாம் கட்ட மனித சோதனைகள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 47

0

0