“எனக்கு விஷம் வைத்தது புடின் தான்”..! ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் பரபரப்புக் குற்றச்சாட்டு..!

1 October 2020, 8:47 pm
Alexei_Navalny_Russia_UpdateNews360
Quick Share

ஆகஸ்ட் மாதத்தில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, தனக்கு விஷம் வைக்கப்பட்டதன் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி-விளாடிமிர் புடின் இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எனினும் இதற்காக தான் பயப்படவில்லை என்று வலியுறுத்தினார்.

“புடின் இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பதாக நான் கூறுகிறேன். என்ன நடந்தது என்பதற்கான வேறு தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை” என்று நவல்னி கூறினார்.

எதிர்க்கட்சி புடினிடம் விளக்கம் கோரியுள்ள நிலையில், புடினின் அரசியல் கட்சி இந்த சம்பவத்தில் ஜனாதிபதியின் தலையீடு எதுவும் இல்லை என மறுத்துள்ளது. அலெக்ஸி நவல்னி ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு ஆவணங்களையும் அவர்கள் வழங்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் குடித்ததாகக் கூறி ஜெர்மன் தலைநகரம் பெர்லினில் உள்ள சாரிடா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 20 அன்று தொடர் ட்வீட்டுகளில், சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் புறப்பட்ட பின்னர் நவல்னி சுயநினைவை இழந்ததாக நவல்னியின் பத்திரிகை செயலாளர் கிரா யர்மிஷ் தெரிவித்தார். நவல்னி உடல்நிலை சரியில்லாமல் போனதால், விமானி ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறங்கினார், அங்கு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு விமான நிலையத்தில் நவல்னி தேநீர் அருந்தியதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தில் சங்கடமாக உணர்ந்ததாகவும், வியர்க்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் செப்டம்பர் 15 அன்று, ரஷ்யாவில் புடினை எதிர்ப்பவர்களின் முகமாக மாறிய நவல்னி, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஜெர்மன் தலைநகரில் சிகிச்சை பெறும் தனது படத்தைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0