தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: காரணம் இதுதானா?..
3 February 2021, 8:46 amஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமேசான் நிறுவன மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடும் போதுதான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார் ஜெஃப் பெசோஸ். தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்தாலும், நிறுவனத்தின் ஒரு நிர்வாக தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அமேசான் நிறுவனம் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. உலகின் பெருநிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் அமேசான் நிறுவனம் 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசாஸால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இப்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்கள். இவர் பதவி விலகுவதற்கான காரணத், அமேசானின் புதிய ப்ராடக்ட்டிலும், அதன் சில ஆரம்ப முயற்சிகளிலும் தாம் கவனம் செலுத்தப் போவதாக ஜெஃப் தெரிவித்துள்ளார்.
அமேசான் வெப் சர்வீஸின் தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸிதான் மொத்த அமேசான் நிறுவனத்திற்கும் அடுத்த தலைமை செயல் அதிகாரி என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அமேசான் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைச் சாத்தியமாக்கியவர் ஆண்டி ஜாஸ்ஸி. அரசாங்கங்கள் மற்றும் மெக் டொனால்ட்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்குகிறது அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம். கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் 52% அமேசான் வெப் சர்வீஸிலிருந்தே வந்துள்ளது.
அமேசான் நிறுவனம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்தாலும், பலலட்சம் கோடி லாபம் ஈட்டினாலும், கொரோனா காலத்தில் தங்களை நிறுவனம் மோசமாக நடத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். இது தொடர்பாகப் பல போராட்டங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணத்தினால் அமேசான் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டது.
கொரோனா தொற்றின் காரணமாக ஒரு பக்கம் அரசாங்கம் மக்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் போது, அமேசான் நிறுவனம் பிரிட்டனில் உள்ள தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கூறியது சர்ச்சையானது. மக்கள் கடைகளுக்குச் செல்ல அச்சப்பட்டு பெரும்பாலான பொருட்களை இணையத்தில் வாங்குவதுதான் இதற்குக் காரணம். பாதுகாப்பை விட லாபம்தான் அமேசான் நிறுவனத்துக்கு முதன்மையாக இருக்கிறது எனத் தொழில் சங்கங்கள் குற்றஞ்சாட்டின.
0
0