உலகின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல..! பெரிய மனசுக்காரரும் ஜெஃப் பெஜோஸ் தான்..!

Author: Sekar
5 January 2021, 4:00 pm
Jeff_Bezos_UpdateNews360
Quick Share

2020’ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக வலம் வந்த அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெஜோஸ், தொண்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தி குரோனிக்கள் ஆஃப் பிளாந்த்ரோபியின் வருடாந்திர சிறந்த நன்கொடைகளின் பட்டியலின்படி, அவர் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நன்கொடையை காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமேசானின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு சுமார் 188 பில்லியன் டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் நிலையில் அவர் நிறைய பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இதற்காக அவர் எர்த் ஃபண்டைத் தொடங்கியதோடு. காலநிலை நெருக்கடியை கையாளும் பனியில் ஈடுபட்டுள்ள இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில், இதுவரை 16 குழுக்களுக்கு 790 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளதாக குரோனிக்கிள் தெரிவித்துள்ளது.

ஜெஃப் பெஜோஸை தவிர்த்து, கடந்த ஆண்டு முதல் 10 நன்கொடைகளின் மொத்த தொகை 2.6 பில்லியன் டாலராகும். கடந்த 2011’க்குப் பிறகு இது மிகக் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Views: - 97

0

0