அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணத்துக்கு ரெடியாகும் 82 வயது பாட்டி

18 July 2021, 8:05 pm
Quick Share

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் ஜூலை 20-ல் விண்வெளிக்கு பறக்க உள்ளார். அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது வேலி பங்க் மற்றும் 18 வயது ஆலிவர் டேமன் ஆகியோரும் பயணிக்கின்றனர்.

வரும் 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ் அவர்களின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் பயணிகளுடன் கூடிய முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயணத்தில் ஜெஃப் பஸாஸ், அவரது சகோதரர் மார்க் பஸாஸ் ஆகியோருடன் 82 வயதான வாலி ஃபங்க் என்பவரும் செல்ல உள்ளார்.தற்போது வாலி ஃபங்க் அவர்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே 1961 ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பெண்களை அனுப்பும் திட்டம் ஒன்றை வைத்திருந்தது நாசா. இதற்காக 13 பெண்களைத் தேர்வும் செய்தது. அந்த 13 பெண்கள் கொண்ட அணியில் வாலியும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 21. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த 13 பெண்கள் யாரும் விண்வெளிக்கு செல்லவில்லை.தற்போது வாலி அவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அவர் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உடன் விண்வெளிக்கு பயணிக்கவிருக்கிறார்.

Views: - 105

0

0