அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை அதிவேகத்தில் கடந்து சென்ற மர்மப்பொருள்…

1 March 2021, 1:08 pm
Quick Share

மெக்ஸிகோ வான்வெளியில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை அதிவேகத்தில் கடந்து சென்ற மர்ம பொருளால், பரபரப்பு நிலவிவருகிறது.


பிப்ரவரி 21-ஆம் தேதி, ஏர்பஸ் 320 வகையை சேர்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் இருந்து பீனிக்ஸ் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது. விமானம், 36 ஆயிரம் அடி உயரத்தில், நியூ மெக்ஸிகோ வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, நீளமான உருளை வடிவம் கொண்ட மர்ம பொருள், விமானத்த மிக நெருக்கமாக அதிவேகத்தில் கடந்து சென்றதாக, விமான கட்டுப்பாட்டு மையத்தில் தகவல் அளித்த விமானி தெரிவித்து உள்ளார்.


இதுதொடர்பாக, பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இதுகுறித்து, அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


வலைப்பதிவர் ஸ்டீவ் டக்ளஸ், மர்ம பொருள், விமானத்தை கடந்து சென்ற நிகழ்வை பதிவு செய்து உள்ளார். இந்த பதிவை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

விமானி தெரிவித்துள்ளதாக பாக்ஸ் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, இந்த மர்ம பொருள்,மெக்ஸிகேவின் ஒயிட் சாண்ட்ஸ் மிசைல் போன்று இருந்தது. இதுபோன்ற மர்ம பொருள்கள், சமீபகாலமாக, இந்த வான்வெளி பகுதியில் அதிகமாக தென்பட்டு வருகிறது.

தற்போது புலப்பட்ட மர்ம பொருள்,நீண்டதாகவும், உருளை வடிவம் கொண்டதாகவும் இருந்தது. இது விமானத்தை மிக நெருக்கமாகவும், அதிவேகத்தில் கடந்து சென்றதால், அதுகுறித்த முழுமையான தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று விமானி தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Views: - 12

0

0