மோதலுக்கு மத்தியிலும் இந்திய மருத்துவரை நினைவு கூர்ந்த சீனா..! அப்படியென்ன செய்துவிட்டார் கோட்னிஸ்..?

By: Sekar
11 October 2020, 7:34 pm
Kotnis_Indian_Doctor_UpdateNews360
Quick Share

1942’ல் சீன-ஜப்பானியப் போரின்போது சீனாவில் இறந்த இந்திய மருத்துவரான துவாரகநாத் கோட்னிஸின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், சீன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சீன சங்கம் நடத்திய ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்றனர்.

1938’ஆம் ஆண்டில், எம். அடல், எம். சோல்கர், கோட்னிஸ், பி.கே.பசு மற்றும் டி. முகர்ஜி ஆகியோர் அடங்கிய ஐந்து மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு, இந்திய மருத்துவ மிஷன் குழுவின் ஒரு பகுதியாக சீனாவுக்கு சென்றது. ஜப்பானுடனான போரில் சீன வீரர்களுக்கு உதவ இந்த குழு சென்றது. ஐந்து பேரில், கோட்னிஸைத் தவிர அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பினர்.

வெளிநாட்டு நாடுகளுடனான நட்புக்கான சீன மக்கள் சங்கம் (சிபிஏஎஃப்சி) இந்த நிகழ்வை நடத்தியது. நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் கோட்னிஸின் 110’ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்திய மருத்துவரின் ஆவணப்படம் மற்றும் இந்திய மருத்துவரின் மரபு குறித்த கலந்துரையாடல் ஆகியவை வெளியிடப்பட்டன.

கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இந்தியா-சீனா எல்லை பதட்டத்தின் பின்னணியில், இது இருதரப்பு உறவுகள் மிக மோசமாக உள்ள சூழ்நிலையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிபிஏஎஃப்சி தலைவர் லின் சாங்டியன், “சமீபத்தில் சீன-இந்திய உறவுகளில் தற்காலிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இரு நாடுகளின் இளம் மாணவர்களும் ஆவணப்படங்களை தயாரிப்பதை நிறுத்தவில்லை.” எனத் தெரிவித்தார்.

மோதலுக்கு பதிலாக, அவர்கள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் நட்புக்கான ஆழ்ந்த நம்பிக்கையை குறுகிய வீடியோ படைப்புகளில் இணைத்து, கோட்னிஸை நினைவுகூருவதற்கு தங்கள் சொந்த வழியைப் பயன்படுத்தினர் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை இணைந்து ஏற்பாடு செய்த பீக்கிங் பல்கலைக்கழகம், பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தகவல் தொடர்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல சீன பல்கலைக்கழகங்களைத் தவிர, டூன் பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் மத்திய பல்கலைக்கழகம் என இரண்டு இந்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

புதுடெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் மூத்த தூதர் மா ஜியாவும் இதில் பங்கேற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சீன அதிகாரப்பூர்வ ஊடகங்கள், வட சீனாவின் ஹெபியின் மாகாணத்தின் தலைநகரான ஷிஜியாஜுவாங்கில் கோட்னிஸின் பெயரிடப்பட்ட ஒரு மருத்துவப் பள்ளிக்கு வெளியே அவரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 58

0

0