1962 vs 2020 : மாவோ வழியில் உள்நாட்டுக் குழப்பத்தை சமாளிக்க இந்தியா மீது போர் தொடுக்கிறாரா ஜி ஜின்பிங்..? ஒரு அலசல்

31 August 2020, 3:39 pm
Xi_Jinping_Updatenews360
Quick Share

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதற்றம் பல தசாப்தங்களாக நீடித்து வந்தாலும், தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் அளித்த பேட்டியில், 1962 போருக்குப் பின்னர் எல்லை நிலைமை மிகவும் மோசமானது என்று கூறினார்.

1962 போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றான லடாக்கில், சீன ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது. லடாக்கில் தான்தோன்றித்தனமாக நிலைமையை மாற்ற சீனா புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுடனான எல்லையில் அமைந்துள்ள திபெத்தின் நடுத்தர மற்றும் கிழக்கு செக்டர்களில் சீனா தனது நிலையை வலுவூட்டி வருகிறது. அதே நேரம் இந்திய ராணுவமும் குறிப்பாக அக்டோபர் முதல் விழிப்புணர்வுக்காக குளிர்கால தங்குமிடங்களை தயார் செய்து வருகின்றன.

கிழக்கு லடாக்கில் உள்ள ஆறுகள் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் உள்ளன. குளிர்கால முகாமைத் தயாரிப்பதற்காக அக்டோபரில் வானிலை மேம்படும் வரை ராணுவம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

1962 அக்டோபரில் தான் சீனா இந்தியா மீது போரை நடத்தியது. தற்போதைய இராணுவ நிலைப்பாட்டின் இன்னும் பிரிக்கப்படாத பிராந்தியமான கிழக்கு லடாக், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

1962 போரின் போது சீனா கடுமையான உள் நாட்டு சிக்கலை, குறிப்பாக உணவு நெருக்கடி மற்றும் தொழில்நுட்பக் குழப்பங்களை எதிர்கொண்டிருந்தது.

1962 vs 2020: மாவோ மற்றும் ஜி

1960’களில் சீனத் தலைவர் மாவோ சேதுங் சவாலை எதிர்கொண்டிருந்தார். கிரேட் லீப் ஃபார்வர்ட் திட்டத்தின் கீழ் தனது கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தனது போட்டியாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இந்தியாவை ஒரு மென்மையான இலக்காகக் காண மாவோவைத் தூண்டியதாக நம்பப்படும் காரணிகளில் இது குறைவாகப் பேசப்படுகிறது.

உணவு நெருக்கடி மற்றும் தொழில்துறை குழப்பத்தையும் சீனா தற்செயலாக தற்போதும் எதிர்கொள்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கிய இரண்டு பிரச்சாரங்களிலிருந்தும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் கூற்றுகளிலிருந்தும் இது தெளிவாகிறது.

கடந்த சில வாரங்களாக, ஜி ஜின்பிங் உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பதற்காக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அசாதாரணமான “சுத்தமான தட்டு” எனும் இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும் பிரச்சாரம், கொரோனா அதிர்ச்சியிலிருந்து சிறந்த மீட்சியை பெறுவதற்காக என அரசாங்கம் கூறியிருந்தாலும், இது சீனப் பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

சீன பொருளாதாரம் : வெடித்துக் கொண்டிருக்கும் பலூன்கள் 

சீனாவில் தனிநபர் தனிநபர் நுகர்வு சராசரியாக ஆறு சதவீதம் சுருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த சீன உள்நாட்டு நுகர்வு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அரசாங்க கொள்முதலுடன் இணைந்து, சீனாவில் மொத்த சில்லறை விற்பனை 11.5 சதவீதத்திற்கு சுருங்கிவிட்டது.

சீனாவின் எதிர்ப்பு மனநிலையை அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு ஒரு சவாலாக ஜி ஜின்பிங் பார்க்கும்போது இது கவலை அளிக்கிறது. ஒரு சமநிலை தீர்வை எதிர்பார்க்கும் சீன அரசாங்கம், அதன் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளை உள்நாட்டு நுகர்வுக்கு சேவை செய்வதை நோக்கி திருப்பி விடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சீனர்கள் தற்போது வருவாய் இழப்பு எனும் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஒரு சராசரி சீனரிடம் அவரது வசம் குறைந்த பணம் இருப்பதால் கொஞ்சம் செலவழிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு சீனாவில் வேலை இழப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. தற்போது சீனாவில் மக்கள் அதிக அளவில் அடமானக் கடன்களை மேற்கொள்வது, சீன மக்கள் மத்தியில் வருமான பாதிப்புகளைக் குறிக்கும் வகையில் உள்ளதாக சீனாவின் தேசிய நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக்கு முந்தைய பலவீனம்

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜி ஜின்பிங் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இது வந்துள்ளது. அவரது லட்சிய பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி சீனக் கருவூலத்திற்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாவோ சேதுங் கிரேட் லீப் ஃபார்வர்ட் திட்டத்தை ஆரம்பித்தபோது இருந்ததைப் போலவே, ஜி ஜின்பிங் கட்சியில் இத்தகைய எதிர்ப்பிற்கு பதிலளித்துள்ளார்.

மாவோ தனது லட்சிய திட்டத்தை 1958’இல் 15 ஆண்டுகளில் பிரிட்டிஷ் தொழில்துறை உற்பத்தியை விஞ்சி சீனாவில் ஒரு தானிய புரட்சியைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சீனரும் கொல்லைப்புறத்தில் உலை வைத்து வீட்டில் எஃகு தயாரிக்க வேண்டியிருந்தது.

வேளாண்மையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க மாவோ இந்தத் துறையில் பணிபுரியும் சமூகங்களைப் பெற்றார். மேலும் விளைபொருள்கள் மத்திய களஞ்சியத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இதன் விளைவாக, கிராமங்கள் உணவு தானிய பிரச்சினையை எதிர்கொண்டன.

1962 இந்தியா-சீனா போருக்கு வழிவகுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சீனாவில் சுமார் 4-5 கோடி மக்கள் பசியால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாவோ தனது கருத்தை எதிர்த்தவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் ஜி ஜின்பிங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பெயரில் தனது எதிர்ப்பாளர்களைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.

தனது கொள்கைகளால் அப்போது மாவோவின் நிலைப்பாடு கட்சிக்குள் வலுவிழக்க ஆரம்பித்தது. இந்த சவாலை சமாளிக்க, மாவோ சூடான தேசியவாததைக் கையில் எடுத்துக் கொண்டார். சீன தேசியவாத சூட்டை அப்போது ஒரு மென்மையான இலக்காக மாவோவால் பார்க்கப்பட்ட இந்தியா மீது ஆக்ரோஷமான தோரணையுடன் உயர்த்தினார் என ஸ்வீடிஷ் மூலோபாய விவகார நிபுணர் பெர்டில் லின்ட்னர் 2017’இல் வெளியிட்ட தனது புத்தகமான சீனாவின் இந்தியப் போரில் தெரிவித்துள்ளார்.

அப்போது பட்டினிச் சாவுகள், இப்போது உணவு நெருக்கடி

ஜி ஜின்பிங் மாவோ சேதுங்கிற்குப் பிறகு தன்னை மறுவடிவமைத்து, சீன அரசியலமைப்பில் ஒரு முத்திரையைப் பெற முயன்றார். இதன் மூலம் கம்யூனிஸ்ட் சீனாவின் நிரந்தர அதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அவர் தற்செயலாக தனது பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் காரணமாக இதேபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார். மேலும் பொருளாதார சிக்கல்கள் கொரோனா ஒரு தொற்றுநோயாக மாறுவதைத் தடுக்க அவரது அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதன் விளைவாக உலகளாவிய எதிர்ப்பை எதிர்கொண்டது.

நாட்டில் உணவு நெருக்கடி குறித்து கவலை தெரிவிக்க சீனாவில் மக்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி கருத்து தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அரசாங்கம் அத்தகைய இடுகைகளை “போலி செய்தி” என்று கூறியுள்ளது. ஆனால் அதே மக்கள் அரசின் ஊடக அறிக்கைகளை குறிப்பிடுகின்றனர். அதில் சீனா தனது மக்கள்தொகைக்கு தேவையான உணவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

சில வல்லுநர்கள் சீன உணவு நெருக்கடிக்கு ஜி ஜின்பிங் அரசாங்கத்தின் கொள்கைகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது கிராமங்களில் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறைந்த ஊதியம் பெறும் ஒவ்வொரு வேலையும், நகரங்களை நோக்கி அதிகமான மக்கள் குடியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். கொரோனா நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கடுமையான அடியாகவும், உலகளாவிய தேவை மந்தமாகவும் காணப்படுவதால், அந்த வேலைகள் கூட இப்போது மறைந்து வருகின்றன.

இந்த பின்னணியில்தான், ஜி ஜின்பிங், மே மாதம், சீன இராணுவத்தை ஒரு போருக்குத் தயார் செய்யச் சொன்னார். இது ஒரு ஆச்சரியமான அறிவிப்பாக அப்போது பார்க்கப்பட்டது. சீனா எந்த நாட்டிற்கு எதிராக போருக்கு தயாராகிறது என்பது அப்போது தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் சீனப் படைகள் ஏற்கனவே கிழக்கு லடாக்கில் அத்துமீறல்களை செய்திருந்தன.

அதன்பிறகு சீனா படை விலகல் ஒப்பந்தங்களை நிராகரித்தது. தளபதி-நிலை மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் அளித்த வாக்குறுதியை மதிக்க மறுத்துவிட்டது. இந்தியாவின் எல்லைக்கு அருகே தனது நிலைகளை பலப்படுத்தி வருகிறது மற்றும் வெகுஜன ஊடகங்களின் அனைத்து சேனல்களிலும் இந்தியாவை குறிவைக்கும் வகையில் சீன தேசியவாதத்தை எழுப்பி வருகிறது.

இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்நாட்டு நெருக்கடிகளை சமாளிக்க, கம்யூனிஸ்ட் சீனாவின் நிறுவனரான மாவோ வழியில் இந்தியா மீது போர் தொடுப்பாரா என பரபரப்பு பாதுகாப்பு வல்லுனர்களிடையே நிலவுகிறது.

அதே நேரத்தில் மாவோ காலத்தில் இருந்த மென்மையான இந்தியாவைப் போல் அல்லாமல், தற்போது அனைத்து நிலைகளிலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, வலுவான அரசியல் தலைமையும் இருப்பதால், இந்தியா மீது போர் தொடுத்தால் அது சீனாவின் வரலாற்றில் மறக்க முடியாத அவமானங்களில் ஒன்றாக மாறும் எனவும் பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Views: - 8

0

0