ஆன்லைன் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் காதலியின் மார்பகத்தை முத்தமிட்ட உறுப்பினர்..! வைரல் வீடியோ..!

27 September 2020, 8:54 pm
Argentina_MP_Kiss_Lover_Breast_UpdateNews360
Quick Share

ஒரு அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், 47 வயதான அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் ஜுவான் எமிலியோ அமேரி ஒரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தனது காதலியின் மார்பகத்தை முத்தமிடும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியதை அடுத்து, பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவர் சால்டாவைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள பெரோனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அர்ஜென்டினாவில் பாராளுமன்ற அமர்வுகள் ஜூம் வழியாக நடத்தப்பட்டுள்ளன. சில சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் நேரடியாக கலந்து கொண்டனர். பெரும்பாலானோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதங்களில் பங்கேற்றனர்.

ஓய்வூதிய நிதி முதலீடுகளைப் பற்றி விவாதிக்க அர்ஜென்டினா பாராளுமன்றக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. கூறப்பட்ட வீடியோவில், பாராளுமன்ற உறுப்பினரின் காதலி அவன் மார்பில் சாய்ந்து கொண்டும் அவர் மடியில் உட்கார்ந்திருப்பதையும் காணலாம். 

ஆன்லைனில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஜுவான் எமிலியோ அமேரி காதலியின் பிளாக் டாப்பை கீழே இழுத்து வெற்று மார்பகங்களை முத்தமிட ஆரம்பித்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது மற்றும் அர்ஜென்டினா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அமேரி அமர்வு முடிந்துவிட்டதாகவும், கேமரா அணைக்கப்பட்டதாகவும் கருதி இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார். அவர் சமீபத்தில் ஒரு மார்பக பெருக்குதல் அறுவை சிகிச்சை செய்ததால் தனது காதலியின் மார்பகங்களை பார்க்க விரும்பியதாக அவர் கூறினார். “அவள் என் அருகில் இருந்தாள். நான் அவளது மார்பில் முத்தமிட்டேன். அவ்வளவுதான்.” என அவர் மேலும் கூறினார்.

அவர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறினாலும், பின்னர் அமேரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு அறிக்கையில், பாராளுமன்றத்தின் கீழ் சபை, “இந்த அளவிலான பொறுப்பற்ற தன்மையை நாங்கள் அனுமதிக்க முடியாது. எனவே அனைத்து விதிகளும் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம். இதனால் அவர் செய்த செயல்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளது.