பெரும்பான்மையை நோக்கி பிடென்..! பின்தங்கிய டிரம்ப்..! அமெரிக்க தேர்தல் நிலவரம் இது தான்..!

4 November 2020, 10:48 am
Joe_Biden_Supporters_UpdateNews360
Quick Share

அமெரிக்க தேர்தல் நேற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்பை விட ஜோ பிடன் ஆரம்பத்தில் முன்னிலை வகிப்பதால், ஜனநாயக கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் தற்போதே பண்டிகை மனநிலையில் உள்ளனர். 

நேற்று மாலை, ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் அருகே அணிவகுத்து, ஜனாதிபதி பதவிக்கு பிடென் தேர்வாகி விடுவார் நம்பிக்கையுடன் இருந்ததால் நடனமாடி கொண்டாடினர்.

எனினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றியை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலமாகவோ அல்லது பக்கச்சார்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாகவோ தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கக்கூடும் என்ற கவலைகள் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்தன.

சமீபத்தில் பெயரிடப்பட்ட பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிளாசா மற்றும் அருகிலுள்ள மெக்பெர்சன் ஸ்கொயர் பார்க் என பெயரிடப்பட்ட இரண்டு தெருக்களில் மக்கள் கூடினர். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இன வெறி எதிர்ப்புக்கள் தொடர்பாக டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்நிலையில், தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், ஜோ பிடன் 223 இடங்களிலும், டிரம்ப் 166 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், யார் வெற்றி பெறுவார் எனும் பரபரப்பில் அமெரிக்கா உள்ளது.

Views: - 23

0

0

1 thought on “பெரும்பான்மையை நோக்கி பிடென்..! பின்தங்கிய டிரம்ப்..! அமெரிக்க தேர்தல் நிலவரம் இது தான்..!

Comments are closed.