லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு ; 3 பேர் உயிரிழப்பு.!

Author: kavin kumar
20 January 2022, 7:00 pm
Quick Share

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 728

0

0