சூடானில் பழங்குடியினரிடையே மோதல்: 83 பேர் உயிரிழப்பு…!!
18 January 2021, 8:24 amதார்பூர்: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே நடந்த மோதலில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும் ஆப்பிரிக்க யூனியனின் 13 ஆண்டு கால அமைதி காக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது. இதனை முன்னிட்டு ஆயுத படையினரை திரும்ப பெறுவது என முடிவானது.
இது முடிவான 2 வாரங்களில் அந்நாட்டின் பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் மற்றும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட வன்முறையில், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தில் பழங்குடியினரில் 83 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயுத படை அதிகாரிகள் உள்பட 160 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தகவலை உள்நாட்டு மருத்துவர்கள் அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0