பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்: இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ…

Author: Udayaraman
5 August 2021, 9:31 pm
Quick Share

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மகாணத்தில் இருக்கும் இந்து கோவில் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்த வார தொடக்கத்தில் சிறுவன் ஒருவர் மதப்பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டது காரணமாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் சிறுபன்மையராக உள்ளனர். அங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் தொகையில் 2 சதவீத பேர் மட்டுமே இந்து.இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் நிலைமையை கட்டிற்குள் கொண்டுவர அங்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் இந்து கோவிலை குண்டர்கள் சிலர் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இந்த வீடியோவை சபாஸ் கில் என்பவர் தனது ட்டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஹிம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மதராசா நூலகத்தில் மத புதத்தங்களை வைத்திருந்த கம்பளத்தின் மீது வேண்டுமென்றே சிறுவன் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 8 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம். அந்த சிறுவன் அதற்கு நிகரான குற்றம் செய்தும் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Views: - 320

0

0