பிரெஞ்சு அதிபருக்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு..? இந்துக்களின் வீடுகளை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் இஸ்லாமியர்கள்..!

2 November 2020, 3:39 pm
Bangaladesh_Muslims_Attacks_Hindu_Houses_UpdateNews360
Quick Share

இஸ்லாமியரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் பேஸ்புக் பதிவு குறித்த வதந்திகள் தொடர்பாக பல இந்து குடும்பங்களின் வீடுகள் பங்களாதேஷின் கொமிலா மாவட்டத்தில் தீவிர இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் ஒரு ஆசிரியர் கருத்து சுதந்திரம் குறித்த வகுப்பில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தைக் காட்டியதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரன் கார்ட்டூன் வெளியிட்டதை வரவேற்றதோடு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள ஒரு கிராமத்தில் ஷங்கர் தேப்நாத், கடந்த சனிக்கிழமை, பிரான்ஸ் தொடர்பான பேஸ்புக் பதிவில் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பேஸ்புக் பதிவு குறித்த வதந்திகள் பரவியதால், சனிக்கிழமையன்று இப்பகுதியில் பதற்றம் அதிகரித்து இஸ்லாமிய கும்பல் ஒன்று இந்துக்களின் வீடுகளை அழித்து தீக்கிரையாக்கியுள்ளது. 

பின்னர் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் இருவரை நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆவார். மற்றவர் அருகிலுள்ள ஆண்டிகோட் கிராமத்தில் வசிப்பவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று கொமிலா மாவட்ட துணை ஆணையர் எம்.டி.அபுல் ஃபசல் மிர் கூறியுள்ளார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சையத் நூருல் இஸ்லாமும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகள் உட்பட பல உள்ளூர்வாசிகளின் வீடுகள் தாக்குதலுக்கு இரையானதாக துணை ஆணையர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்று கேட்டதற்கு, நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று மிர் கூறினார்.

Views: - 27

0

0

1 thought on “பிரெஞ்சு அதிபருக்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு..? இந்துக்களின் வீடுகளை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் இஸ்லாமியர்கள்..!

Comments are closed.