2750 டன் அம்மோனியம் நைட்ரேட்..! லெபனான் குண்டுவெடிப்புக்குக் காரணம் இதுதான்..!
5 August 2020, 4:00 pmலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பு ஏற்கனவே 100’க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் பிரதமர் ஹசன் டயப், 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்டால் ஏற்பட்ட வெடிப்பினால் தான் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
“தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் ஒரு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பெரிய வெடிப்புகள் நேற்று லெபனானின் தலைநகரம் பெய்ரூட்டை உலுக்கியது. பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்க அதிகாரி நேற்று தெரிவித்தார்.
இந்த கொடூரமான குண்டுவெடிப்பைக் குறிக்கும் பல வீடியோக்கள் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0
0