மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்…’பளார்’ விட்ட நடிகர் வில் ஸ்மித்: திகைத்துப் போன ஆஸ்கர் விழா அரங்கம்..!!

Author: Rajesh
28 March 2022, 12:04 pm
Quick Share

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற நடிகர் வில் ஸ்மித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை கிங் ரிச்சர்ட் ஆக அவர் நடித்துள்ளார்.

will-smith-slaps-chris-rock

அப்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் சிகையலங்காரம் பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துகொண்டிருந்தார். தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.

விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் ராக் கூறி கிண்டல் செய்தார். சமீப காலங்களில், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியாவுடன் பிங்கெட் போராடிக் கொண்டிருப்பதாக கூறினார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார்.

அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார்.இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தொகுப்பாளர் கிறிஸ் ராக் பதறிபோனார். பின்னர் அமைதியான அவர் விழாவினை தொகுத்து வழங்கினார்.

இதனையடுத்து, விருது பெற்றபோது உணர்ச்சிபூர்வமாக பேசிய வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டார். விருது வழங்கும் விழாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். “நான் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விருதுக்கு முன்மொழியப்பட்ட அனைத்து சக கலைஞர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்,” என்று வில் ஸ்மித் கூறினார்.

will smith: மனைவியை கிண்டலடித்த தொகுப்பாளருக்கு பளார்விட்ட நடிகர்... ஆஸ்கர்  விருது விழாவில் அதிர்ச்சி சம்பவம்! - oscar 2022: will smith slapped chris  rock on the stage ...

Views: - 1195

0

0