ட்ரம்ப் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை….!!

17 November 2020, 3:45 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் 2வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் தாண்டி உள்ளது.

இதுவைரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிபர் டடிரம்ப் நிர்வாகத்தின் மீது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், அதிபர் டிரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.