இந்தியா மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு வெற்றி..! குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய பாகிஸ்தான் முடிவு..!
22 October 2020, 7:11 pmசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியின் மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு நீதி வழங்க இந்தியா மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு பலன் கிடைத்து வருவது தெரிகிறது.
வரைவு மசோதா – ‘சர்வதேச நீதிமன்றம் (மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனை) கட்டளை’ – நாட்டின் எதிர்க்கட்சியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தின் சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.
உளவு மற்றும் பயங்கரவாதம் என்ற அபத்தமான குற்றச்சாட்டில் ஐம்பது வயதான ஜாதவ் ஏப்ரல் 2017’இல் பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜாதவுக்கு தூதரக உதவியை மறுத்தது தொடர்பாக இந்தியா 2017’ல் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை அணுகியதுடன், மரண தண்டனையைக்கு எதிராகவும் வழக்கு போட்டது.
ஜூலை 2019’இல் ஹேக்கை தளமாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் பயனுள்ள மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனையை செய்ய வேண்டும் என்றும் தாமதமின்றி இந்தியாவுக்கு தூதரக அணுகலை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்ப்பளித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
0
0