அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை.. 170 ஆண்டுகளுக்கு பின் காட்சியளித்தது!

1 March 2021, 11:27 am
Quick Share

உலகில் அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பாப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டது. இதனால் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இயற்கை பல மர்ம முடிச்சுகளால் ஆனது. பல ஆண்டுகளாக மனிதர்கள் ஆய்வுகளை நடத்தினாலும், சில ரகசியங்களை அது பொத்தி பாதுகாக்கும். குறிப்பிட்ட நேரத்தில் நம்மை அது அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படி தான் ஒரு இன்ப அதிர்ச்சி நடத்தி உள்ளது இயற்கை. ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு மேல் காணாமல் போய், அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

170 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில், கருப்பு கண்களை கொண்ட பாப்லர் பறவை இனம் வாழ்ந்த வந்தது. கடைசியாக 1848 ஆம் ஆண்டு காணப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட இந்த பறவை, அதன் பின் யார் கண்ணிலும் படவில்லை. அதனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அதிசியத்தக்க வகையில், முஹம்மது சுரான்டோ மற்றும் முஹம்மது ரிஸ்கி என்ற இருவர், கடந்த ஆண்டு, போர்னியோவின் மழைக்காடுகளில் இந்த பறவையைக் கண்டனர். அவர்களை அதனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாததால், அதனை புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் பறக்கவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பறவை கண்காணிப்பு குழு கண்டபின் தான், அந்த பறவை குறித்து அவர்கள் அறிந்து கொண்டனர்.

“இது போன்ற கண்டுபிடிப்புகள் நம்பமுடியாதவை. மேலும் பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேலாக காணாமல் போன பிற உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்ர நம்பிக்கை பிறந்துள்ளது’’ என, உலக வனவிலங்கு பாதுகாப்பின் மூத்த இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

Views: - 11

0

0