பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை..! பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்..!

30 January 2021, 11:39 am
US_Antony_Blinken_UpdateNews360
Quick Share

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், டேனியல் பேர்ல் கொலைக்கு காரணமான தண்டனை பெற்ற பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து விவாதித்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் 38 வயதான தெற்காசியா பணியகத் தலைவரான டேனியல் பேர்ல் 2002’இல், ஐஎஸ்ஐ மற்றும் அல்கொய்தா இடையேயான தொடர்புகள் குறித்து விசாரித்தபோது, பாகிஸ்தானில் இருந்தபோது கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கின் கொலையாளிகளை விடுவிக்கும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த அமெரிக்காவின் கவலையை பிளிங்கன் வலுப்படுத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதி அகமது ஒமர் சயீத் ஷேக் மற்றும் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கடத்தல் மற்றும் கொலைக்கு காரணமான மற்றவர்களுக்கு எவ்வாறு தண்டனையை உறுதி செய்வது என்று பிளிங்கன் மற்றும் குரேஷி விவாதித்தனர் என பிரைஸ் கூறினார்.

கூடுதலாக, அமெரிக்க செயலாளரும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகளில் தொடர்ந்து அமெரிக்க-பாகிஸ்தான் ஒத்துழைப்பின் முக்கியத்துவம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு மற்றும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.

ஒரு நாள் முன்னதாக, டேனியல் பேர்லை 2002’ல் பரபரப்பாக கடத்தி கொலை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிளிங்கன் கவலை தெரிவித்ததோடு, இந்த தீர்ப்பு எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை என்றும் கூறினார்.

பேர்லின் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து சட்டரீதியான விருப்பங்களையும் ஆராயுமாறு பாகிஸ்தானை பிளிங்கன் வலியுறுத்தினார்.

Views: - 7

0

0