உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த பிரேசில் : இந்தியா பிடித்திருக்கும் இடம் தெரியுமா?

19 June 2021, 11:02 am
Brazil- Updatenews360
Quick Share

உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் கடும் மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல்நாடாக பிரேசில் உள்ளது.

இதே போல அதிக உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்று பிரேசில் நாட்டில் படு தீவிரமாக பரவி வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 1 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதே போல் 2449 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 4,98,621ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் அதிக கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்ககு தள்ளி பிரேசில் முதலிடத்தில் உள்ளது.

Views: - 215

0

1